Tag: நீதிப் போரில்

  • தனி மாந்தன் தேசத்தாரும் Thani Maanthan Desathaarum

    தனி மாந்தன் தேசத்தாரும்,
    நீதிப் போரில் சேர்ந்துமே
    நன்மை நாட்ட தீமை ஓய்க்க
    ஓர் தருணம் நேருமே;
    ஸ்வாமி ஆட்சி, மேசியாவை
    ஏற்று அன்றேல் தள்ளியே
    தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து
    ஆயுள்காலம் ஓடுமே

    சத்திய நெறி மா கடினம்
    பயன் பேரும் அற்றதாம்
    சித்தி எய்தாதாயினுமே
    நீதியே மேலானதாம்
    நீதி வீரன் நீதி பற்ற
    கோழை நிற்பான் தூரமே
    நீதி பற்றார் யாரும் ஓர்நாள்
    நிற்பர் நீதி பற்றியே

    வீர பக்தர் வாழ்க்கை நோக்கி
    கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்
    கோர நோவு நிந்தை சாவு
    சிலுவையும் சகிப்போம்
    காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை
    புதிதாய் விளங்குமே
    மேலும் முன்னும் ஏறவேண்டும்
    சத்திய பாதை செல்வோரே

    வீரன் அவன், லோகம் ஆள்வான்
    நீதி வாழ்க்கை வெல்லுமே
    சாரும் பக்தனையே நாதர்
    காப்பார் காணா நின்றுமே


    Thani Maanthan Desathaarum
    Neethi Poril Sernthume
    Nanmai Naatta Theemai Oyka
    Or Tharunam Nerume
    Swami Aatchi Mesiyaavai
    Etru Antrel Thalliye
    Theemai Nanmai Ontrai Thernthu
    Aayul Kaalam Odumae

    Sathya Neri Maa Kadinam
    Payan Peru Atrathaam
    Siththi Eythaa Thaayinumae
    Nithiyae Melaanathaam
    Neethi Veeran Neethi Patra
    Kozhai Nirpaan Thuuramae
    Neethi Patraar Yaarum Ornaal
    Nirpar Neethi Patriyae

    Veera Bakthar Vazhkkai Nokki
    Karthaa Ummai Pinselvom
    Kora Novu Ninthai Saavu
    Siluvaiyum Sahippom
    Kaalanthorum Kiristhu Vazhkkai
    Puthithaai Vilangumae
    Melum Munnum Eeera Vaendum
    Sathya Paathai Selvorae

    Veeran Avan Logam Aalvaan
    Neethi Vazhkkai Vellumae
    Saarum Bakthanaiyae Naathar
    Kaappaar Kaanaa Entrumae