Tag: மனமே நீ ஏன் விணாய்

  • மனமே நீ ஏன் விணாய் Maname ni een vinay

    மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்
    வீணாய் கவலை கொள்வதனால்
    அதனால் உனக்கும் லாபம் என்ன
    ஒரு முழம் கூட்ட முடியுமோ

    உலகோர் உன்னை வெறுத்திட்டாலும்
    வெறுத்திடா தேவன் உனக்குண்டு
    உண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார்
    உன்னதர் இயேசு உன் துணையே

    உன்னை விசாரிக்க யாருமில்லை
    என்று எண்ணி ஏங்குகிறாய்
    உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார்
    தாயினும் மேலாய் நடத்திடுவார்

    பறக்கும் பறவையை கவனித்துப் பார்
    விதைக்கவில்லை அறுக்கவில்லை
    அவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார்
    உன்னையும் போஷித்து நடத்திடுவார்


    maname ni een vinay sinthikkiray
    vinay kavalai kolvathanal
    athanal unakkum lapam enna

    oru muzham kutta mutiyumo
    ulakor unnai veruththittalum
    veruththita thevan unakkuntu
    unmaiyay nesikkum iyesuvaip par
    unnathar iyesu un thunaiye

    unnai visarikka yarumillai
    enru enni eengkukiray
    unnai visarikkum iyesuvaip par
    thayinum melay nataththituvar

    parakkum paravaiyai kavaniththup par
    vithaikkavillai arukkavillai
    avaikalai poshikkum iyesuvaip par
    unnaiyum poshiththu nataththituvar