Tag: அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

  • அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Andraadam andraadam kaapaatrineer

    அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
    அன்போடு நடத்தி வந்தீர்
    அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
    எந்நாளும் நடத்திடுவீர்

    பேர் சொல்லி அழைத்து
    பிள்ளை என்றணைத்து
    பின்பற்றச் செய்தீரைய்யா
    ஆவியில் நிறைத்து
    அல்லல்கள் குறைத்து
    ஆசீர்வதித்தீரைய்யா

    எங்களை நீர் நினைப்பதற்கும்
    எங்களை விசாரிப்பதற்கும்
    நாங்கள் எம்மாத்திரம் தேவா – 2

    மேன்மையானதே மகத்துவமானதே
    வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே – 2
    விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே
    உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே – எங்களை நீர்

    ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே
    உமக்கு முன்பு நான் மாயை மாயையே – 2
    நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரே
    என் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே – எங்களை நீர்

    தொலைந்த மனிதரை தேடினீரைய்யா
    தவறும் மனிதரை தாங்கினீரைய்யா – 2
    பாவியென்று தெரிந்திருந்தும் நீர் என்னை மீட்டீரைய்யா
    சாதாரண மனிதரையும் மேலோகம் சேர்த்தீரைய்யா – எங்களை நீர்


    Andraadam andraadam kaapaatrineer
    Anbodu nadathi vandheer
    Annaalum innaalum kaapaatrineer
    Ennaalum nadathiduveer

    Per solli azhaithu
    Pillai endranaithu
    Pinpatra seidheeraiyaa
    Aaviyil niraithu
    Allalgal kuraithu
    Aaseervadhitheeraiyaa

    Engalai neer ninaipadharkum
    Engalai visaaripadharkum
    Naangal emmaathiram dheva – 2

    Menmaiyaanadhe magathuvamaanadhe
    Vaanam thaandiye um naamam nirkudhe – 2
    Vinmeengalai vennilavai annaandhu paarkaiyile
    Um kaigalin kiriyaigalai satre yosikkaiyile – Engalai

    Janangal yaavarum ondrum illaiye
    Umakku munbu naan maayai maayaiye- 2
    Naan yaarendru arindhavare mannendru therindhavare
    En naatkalai alandhavare pullendru purindhavare – Engalai

    Tholaindha manidharai thedineeraiyaa
    Thavarum manidharai thaangineeraiyaa – 2
    Paaviyendru therindhirundhum neer ennai meetteeraiya
    Saadhaarana manidharaiyum melogil sertheeraiyaa – Engalai