Tag: என் பாவ பரிகாரியேஎன்

  • என் பாவ பரிகாரியே En Paava Parigaariye

    என் பாவ பரிகாரியே
    என் ஜீவ உபகாரியே

    இறை இயேசுவே மறை மாமணியே
    நிறை ஆசீர் அருள்வீரையா
    குறையாவும் போக்கி
    பாவ கறையாவும் நீக்கி
    புது வாழ்வு அளித்தீரையா

    உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயா
    புது ஜீவன் தரும் தேவனே
    மனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்து
    மறுரூபம் ஆக்கும் ஐயா

    எனக்காகவே நீர் மரித்தீரையா
    எனக்காக உயிர்த்தீரையா
    உம் வருகையில் நானும் சரியாக இருக்க
    கிருபையால் மூடும் ஐயா


    En Paava Parigaariye
    En Jeeva Ubagaariye

    Irai Yesuve Marai Maa Maniye
    Nirai Aaseer Arulveeraiyaa
    Kuraiyavum Pokki
    Paava Karaiyaavum Neekki
    Puthu Vaazhvu Aliththeeraiyaa

    Um Iraththathaal Ennai Kazhuvum Ayya
    Pudhu Jeevan Tharum Dhevane
    Manam Mara Cheithu Nal Gunam Yaavum Thanthu
    Maruroobam Aakkum Ayya

    Enakkaagave Neer Maritheeraiyaa Enakkaaga Uyirtheer Ayya
    Um Varugaiyil Naanum Sariyaaga Irukka
    Kirubaiyaal Moodum Ayya