Tag: நல்லவரே நம் கர்த்தரே முன்

  • நல்லவரே நம் கர்த்தரே முன் Nallavare nam karththare mun

    நல்லவரே நம் கர்த்தரே முன்
    செல்லும் கர்த்தாதி கர்த்தரே
    வல்லவரின் எல்லை இல்லா கிருபை
    தொடர்ந்து வரும் நித்தமே

    உந்தன் தஞ்சம் வேண்டி ஒன்று கூடி நின்றோம்
    எங்கள் ஆண்டவரே கர்த்தரே
    எதிர் வரும் பகை அதிர்ந்தோடும் பெரும்
    இரட்சிப்பை நாம் காண்போம்
    கர்த்தரை தேசம் பற்றிக் கொள்ள
    சத்துருக்கள் வரும் அந்நேரமே
    பக்தியாய் பணிந்து நாம் தொழுவோம்
    தேவன் நல்லவர் வல்லவரே

    கர்த்தர் தந்த வார்த்தை பெற்ற மக்களாக
    நித்தம் நம் மேன்நிலை பெறுவோம்
    தீர்க்க தீர்க்க தரிசனங்கள் நம்பி
    சித்தி பெற்றே வளம் பெறுவோம்
    கர்த்தரின் மகத்துவத்தை பாடி
    துதி பேறு உயர்த்திப் கூறவே
    பக்தர் நல் சேனை முன் சென்று
    வெற்றியின் தொனியை நாம் எழுப்புவோம்

    இந்த யுத்தம் உங்கள் யுத்தம் அல்ல என்று
    பரிசுத்த தேவன் வாக்கு கேட்டு நாம்
    கர்த்தரின் நல் மீட்பினை காண்போம்
    திடம் கொள்வோம் ஜெயம் பெறுவோம்
    பகைவர் கூட்டம் கண்டு அஞ்சிடாமல்
    பரிசுத்தரை பணிந்து தொழுவோம்
    பெரு முழுக்கத்தோடு நாம் முன்னேறி
    பரம தேவனை துதித்து பாடுவோம்


    Nallavare nam karththare mun
    sellum karththathi karththare
    vallavarin ellai illa kirupai
    thotarnthu varum niththame

    unthan thanysam venti onru kuti ninrom
    engkal aantavare karththare
    ethir varum pakai athirnthotum perum
    iratsippai nam kanpom
    karththarai thesam parrik kolla
    saththurukkal varum annerame
    pakthiyay paninthu nam thozhuvom
    thevan nallavar vallavare

    karththar thantha varththai perra makkalaka
    niththam nam mennilai peruvom
    thirkka thirkka tharisanangkal nampi
    siththi perre valam peruvom
    karththarin makaththuvaththai pati
    thuthi peru uyarththip kurave
    pakthar nal senai mun senru
    verriyin thoniyai nam ezhuppuvom

    intha yuththam ungkal yuththam alla enru
    parisuththa thevan vakku kettu nam
    karththarin nal mitpinai kanpom
    thitam kolvom jeyam peruvom
    pakaivar kuttam kantu anysitamal
    parisuththarai paninthu thozhuvom
    peru muzhukkaththotu nam munneri
    parama thevanai thuthiththu patuvom