Tag: வா மனிதா வா வா

  • வா மனிதா வா வா va manitha va va

    வா மனிதா வா வா
    இயேசுவை சந்திக்க வா
    உன் பாவத்தை போக்கவே இயேசு
    பிரான் இப்பாரினிலே பிறந்தார்
    குருபரனாய் திருமகனாய்
    வந்தார் புவியில்

    மனிதனின் மனதில் ஆயிரம்
    ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும்
    அகந்தை பெருமை சுயநலம்
    எல்லாம் அலைகடலாய் பெருகும்
    பேராசையினால் உன் நெஞ்சில்
    மிருகங்கள் குடியிருக்கும்
    அதற்கு மருந்தொன்று இருக்கிறது
    விடி வெள்ளி பிறக்குது
    இயேசுவின் வழியினில் வா என்றே நீ

    எல்லாம் இருந்தும் நிம்மதி என்பது
    எங்கும் இருப்பதில்லை
    சொல்லில் செயலில் ஒருமுகம் மனது
    நிலையாய் வருவதில்லை
    இல்லாதவனால் இருந்தால்
    இரக்கம் கிடைப்பதில்லை
    இதற்கு மருந்தொன்று இருக்கிறது
    விடி வெள்ளி பிறக்குது
    இயேசுவின் வழியினில் வா என்றே நீ

    வருத்தாய் பாரம் சுமக்கின்ற
    மனிதனை வருந்தி அழைக்கின்றார்
    அன்பு கருணை இரக்கம் கொண்டு
    ஆதரவளிக்கின்றார்
    பொல்லாதவாய் இருந்தாலும்
    மன்னிப்பு அளிக்கின்றார்
    இந்த புண்ணியர் இயேசுவின்
    விண்ணக அரசினில்
    உன்னை சேர்த்திட வா என்றே நீ


    va manitha va va
    iyesuvai santhikka va
    un pavaththai pokkave iyesu
    piran ipparinile piranthar
    kuruparanay thirumakanay
    vanthar puviyil

    manithanin manathil aayiram
    aasaikal malaippol kuvinthirukkum
    akanthai perumai suyanalam
    ellam alaikatalay perukum
    perasaiyinal un nenysil
    mirukangkal kutiyirukkum
    atharku marunthonru irukkirathu
    viti velli pirakkuthu
    iyesuvin vazhiyinil va enre ni

    ellam irunthum nimmathi enpathu
    engkum iruppathillai
    sollil seyalil orumukam manathu
    nilaiyay varuvathillai
    illathavanal irunthal
    irakkam kitaippathillai
    itharku marunthonru irukkirathu
    viti velli pirakkuthu
    iyesuvin vazhiyinil va enre ni

    varuththay param sumakkinra
    manithanai varunthi azhaikkinrar
    anpu karunai irakkam kontu
    aatharavalikkinrar
    pollathavay irunthalum
    mannippu alikkinrar
    intha punniyar iyesuvin
    vinnaka arasinil
    unnai serththita va enre ni