Tag: Aathumaavae Karththaraiy

  • ஆத்துமாவே கர்த்தரையே Aathumaavae Karththaraiye

    ஆத்துமாவே கர்த்தரையே
    நோக்கி அமர்ந்திரு -2
    நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
    வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

    விட்டுவிடாதே நம்பிக்கையை
    வெகுமதி உண்டு…
    விசுவாசத்தால் உலகத்தையே
    வெல்வது நீதான் -2
    உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2

    நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
    வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே

    உன்னதமான கர்த்தர் கரத்தின்
    மறைவில் வாழ்கின்றோம்…
    சர்வ வல்லவர் நிழலில் தினம்
    வாசம் செய்கின்றோம் -2
    வாதை அணுகாது
    தீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது

    பாழாக்கும் கொள்ளை நோய்
    மேற்கொள்ளாமல்…
    பாதுகாத்து பயம் நீக்கி
    ஜெயம் தருகின்றார் -2
    சிறகின் நிழலிலே
    மூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது

    கர்த்தர் நமது அடைக்கலமும்
    புகலிடமானார்…
    நம்பியிருக்கும் நம் தகப்பன்
    என்று சொல்லுவோம் -2
    சோதனை ஜெயிப்போம்
    சாதனை படைப்போம் -2 -நான் நம்புவது

    நமது தேவன் என்றென்றைக்கும்
    சதாகாலமும்….
    இறுதிவரை வழி நடத்தும்
    தந்தை அல்லவா -2
    இரக்கம் உள்ளவர்
    நம் இதயம் ஆள்பவர் -2 -நான் நம்புவது


    Aathumaavae Karththaraiye
    Nokki Amarnthiru -2
    Naan Nambuvathu Kartharale
    Varumae Vanthidumae -2 -Aathumaavae

    Vittuvidathae Nambikaiyai Vegumathi Undu
    Visuvasathaal Ulagaththaiye Velvathu Neethan
    Unakkul Vaazhbavar Ulagai Aazhbavar

    Unnathamaana Karathin Maraivil Vaazhkintrom
    Sarva Vallavr Nizhali Thinam Vaasam Seikintrom
    Vaathai Anugathu Theengu nearidathu

    Paazhakkum Kollai Nooi Mearkollamal
    Paathukaathu Bayam Neekki Jeyam Tharukintraar
    Sirakin Nilalilae Moodimaraikintraar

    Karthar Namathu Adaikalam Pugalidamanaar
    Nambiyirukkum Nam Thagappan Entru Solluvom
    Sothanai Jeyippom saathanai Padaippom

    Namathu Devan Entratraikkum Sathakaalamum
    Iruthivarai Vazhi Nadathum Thanthai Allava
    Erakkamullavar Nam Idhayam Aazhbavar