Tag: anpu kurntha en

  • அன்பு கூர்ந்த என் Anpu kurntha en

    அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
    அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
    வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
    எதுவும் பிரிக்க முடியாது
    கிறிஸ்துவின் அன்பிலிருந்து

    எனது சார்பில் கிறிஸ்து இருக்க
    எனக்கு எதிராய் யார் இருப்பார்
    மகனையே தந்தீரைய்யா
    மற்ற அனைத்தையும் தருவீரைய்யா

    தெரிந்து கொண்ட உம் மகன் நான்
    குற்றம் சாற்ற யார் இயலும்
    நீதிமானாய் மாற்றினீரே
    தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே

    கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
    எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
    பரலோகத்தில் தினம் எனக்காய்
    பரிந்து பேசி ஜெபிக்கின்றார்


    anpu kurntha en kiristhuvinale
    anaiththilum nan verri peruven
    vethanai thunpam innal itarkal
    ethuvum pirikka mutiyathu
    kiristhuvin anpilirunthu2

    enathu sarpil kiristhu irukka
    enakku ethiray yar iruppar
    makanaiye thanthiraiyya
    marra anaiththaiyum tharuviraiyya

    therinthu konta um makan nan
    kurram sarra yar iyalum
    nithimanay marrinire
    thantanai thirppu enakkillaiye

    kiristhu enakkay mariththare
    enakkay mintum uyirththare
    paralokaththil thinam enakkay
    parinthu pesi jepikkinrar