Tag: Eriko kottai

  • எரிகோ கோட்டை Eriko kottai

    எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
    சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே
    யோர்தான் நதியையும் கடக்க முடியுமே
    இயேசுவின் பேரை சொன்னால்
    போதுமே உன் நாமமே

    மோசேயோடே இருந்த தேவன்
    அவர் உன்னோடும் வந்திடுவார்
    இஸ்ரவேலை வழி நடத்தினவர்
    உன்னையும் அவர் நடத்திடுவார்
    கலங்காதே நீ திகையாதே
    உன் தேவன் என்றும் உன்னோடு
    அவரே உந்தன் கன்மலை
    அவரே உந்தன் கன்மலை

    ஆகாரை தேற்றியவர் – உன்
    இருதயத்தையும் மாற்றிடுவார்
    எஸ்தரை பலப்படுத்தினவர்
    உன்னையும் ஸ்திரப்படுத்திடுவார்
    அஞ்சாதே நீ பதறாதே
    அன்பின் தேவன் உன் அருகிலே
    அவரே உந்தன் அடைக்கலமே
    அவரே உந்தன் அடைக்கலமே

    கிதியோன் மேல் இருந்த கிருபை
    உன் மேலும் இறங்கிடுதே
    தாவீதை உயர்த்தினவர்
    உன்னையும் மேன்மைப் படுத்திடுவார்
    அவரிடம் நீ வந்திடு
    அவரிடம் உன்னை தந்திடு
    அவரே உன்னை வழி நடத்திடுவார்
    அவரே உன்னை வழி நடத்திடுவார்


    Eriko kottai itinthu vizhukuthe
    sivantha samuththiram irantay pilakkuthe
    yorthan nathiyaiyum katakka mutiyume
    iyesuvin perai sonnal
    pothume un namame

    moseyote iruntha thevan
    avar unnotum vanthituvar
    isravelai vazhi nataththinavar
    unnaiyum avar nataththituvar
    kalangkathe ni thikaiyathe
    un thevan enrum unnotu
    avare unthan kanmalai
    avare unthan kanmalai

    aakarai therriyavar un
    iruthayaththaiyum marrituvar
    estharai palappatuththinavar
    unnaiyum sthirappatuththituvar
    anysathe ni patharathe
    anpin thevan un arukile
    avare unthan ataikkalame
    avare unthan ataikkalame

    kithiyon mel iruntha kirupai
    un melum irangkituthe
    thavithai uyarththinavar
    unnaiyum menmaip patuththituvar
    avaritam ni vanthitu
    avaritam unnai thanthitu
    avare unnai vazhi nataththituvar
    avare unnai vazhi nataththituvar