Tag: ilavasamaai Kirubayinaal

  • இலவசமாய் கிருபையினால் ilavasamaai Kirubayinaal

    இலவசமாய் கிருபையினால்
    என்னை நீதிமானாக்கினீரே
    நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது
    அப்பா உம் கிருபைதானே
    நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா

    உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்
    தேடி வந்தீரய்யா
    ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்
    ஒருநாள் அறிவை தந்தீரய்யா
    கீழானதையல்ல மேலானதை நாடு
    என்று சொன்னீரய்யா

    பாவத்தின் கறைகளால் நிறைந்த
    இவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யா
    பாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும்
    பெலனை தந்தீரய்யா
    காண்கின்ற உலகமல்ல காணாத
    பரலோகம்தான் உனக்கு என்றீரய்யா

    என் சுயநீதியெல்லாம் அழுக்கான
    கந்தை உணர செய்தீரய்யா
    அழுக்கு உடை அகற்றி அழகான
    வெண்ணாடை எனக்கு தந்தீரய்யா
    மானத்தை காத்திடும் உன் வஸ்திரம்
    காத்திடு என்று சொன்னீரய்யா


    ilavasamaai Kirubayinaal
    Ennai Neethimaanaakineerae
    Nirmoolamaagaamal Immattum Kaathathu
    Appa Um Kirubaithane
    Nantri, Nantri Iyya
    Kodi Nantri Iyya

    Ulagathin Pinney Odikondirunthene
    Thedi Vantheeraiyya
    Aasthium Aiswaryamum Azinthidum Orunalz
    Arivai Thantheeraiyya
    Keelzaanathaiyalla Melaanathai Naadu
    Entru Sonneeraiyya

    Paavathin Karaigalaal Niraintha Ivvulagil
    Parisutham Thantheeraiyya
    Paavathai Ethirkka Ovvoru Naalum
    Belanai Thantheeraiyya
    Kaangintra Ulagamalla
    Kaanaatha Paralogamthaan
    Unakku Enteeraiyya

    En Suya Neethiyellam Azukkaana Kanthai
    Unara Seitheeraiyya
    Azukku Udai Agatri Alagaana Vennaadai
    Enakku Thandeeraiyya
    Maanathai Kaathidum Un Vastram
    Kaathidu Entru Sonneeraiyya