Tag: Isaiyilae Suramena

  • இசையிலே சுரமென Isaiyilae Suramena

    இசையிலே சுரமென பிறந்தவர்
    திசையெங்கும் ஒலியென இருந்தவர்
    கருவிலே திருவென மலர்ந்தவர்
    அருகிலே குருவென திகழ்ந்தவர்
    பாவத்தின் விலங்கை ஒழித்தவரே
    சாபத்தின் கொடுமை வென்றவரே
    ஜோதியின் சுடராய் நின்றவரே
    தேவா வாழ்வின் பொருள் நீரே பொருள் நீரே

    தரித்திர வேடத்தில் உதித்தவர்
    சரித்திர வேதத்தில் நிலைத்தவர்
    அருவாய் உருவாய் உயிரிலே
    திருமறை எமக்கே அளித்தவர்
    இருளினையே அகற்றிட நாளும்
    நிலவென வானில் உதித்தவர்
    விதையினிலே மறைந்துள்ள ஜீவன்
    யாரோ நீரே இயேசையா

    இயற்கையில் அதிசயம் படைத்தவர்
    அழகிய உலகினை படைத்தவர்
    அன்பினிலே நம்மை அணைத்தவர்
    அணைப்பினில் உள்ளம் ஆண்டவர்
    பசுமையிங்கே துளிர்த்திட நாளும்
    மழையென பூமியில் பொழிந்தவர்
    அமைதியையே தினமளித்தருளும்
    நீரே தந்தை தாயுமென்பேன்


    Isaiyilae Suramena Pirandhavar
    Dhisaiyengum Oliyena Irundhavar
    Karuvilae Thiruvena Malarndhavar
    Arugilae Guruvena Thigazhndhavar
    Paavadhin Vilangai Ozhidhavarae
    Saabadhin Kodumai Vendravarae
    Jodhiyin Sudaraai Nindravarae
    Deva Vaazhvin Porul Neerae Porul Neerae

    Tharithira Vaedadhil Udhidhavar
    Saridhira Vaedhadhil Nilaidhavar
    Aruvaai Uruvaai Uyirilae
    Thirumarai Yemakae Alidhavar
    Irulinaiyae Agatrida Naanlum
    Nilavena Vaanil Udhidhavar
    Vidhaiyinilae Maraindhulla Jeevan
    Yaaro Neerae Yesaiya

    Eyarkkaiyil Adhisayam Padaidhavar
    Azhagiya Ulaginai Padaiththavar
    Anbinilae Nammai Anaidhavar
    Anabipinil Ullam Aandavar
    Pasumaiyinage Thulirthida Naalum
    Mazhaiyena Boomiyil Pozhindhavar
    Amaidhiyaiyae Dhinamlitharulum
    Neerae Thandhai Thaayumenbaen