Tag: Iyesu onre ventum

  • இயேசு ஒன்றே வேண்டு Iyesu onre ventum

    இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு
    என்றும் இயேசு ஒன்றே வேண்டும்
    எந்தன் இயேசு நினைவோடு
    என் இதயம் என்றும் மகிழ வேண்டும்
    இயேசு தாசன் நான் என்றே
    மாந்தர் என்றும்
    பாசம் கொள்ள வேண்டும்
    எந்தன் இயேசு கிறிஸ்துவையே
    போற்றி நான் பாடி புகழ வேண்டும்

    நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லா
    நிம்மதி பெற வேண்டும்
    எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசு
    வந்து தரிசனம் தரவேண்டும்
    எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும்
    எந்தன் வாழ்க்கை முழுவதுமே
    இயேசுவுக்கு சாட்சியாக வேண்டும்

    படித்து தியானிக்கவே கையில்
    என்றும் பரிசுத்த வேதம் வேண்டும்
    நான் பாடி மகிழ்ந்திடவே இயேசு
    கீத பாடல் கூடவே வேண்டும்
    நான் செல்லும் இடமெல்லாம் இயேசு
    புகழ் சொல்லும் வரம் வேண்டும்
    இயேசு சேவையை நான் செய்தே
    உலகினில் ஜீவித்திட வேண்டும்
    இயேசு சேவையை நான் செய்தே
    எந்தன் ஜீவனை நான் விடவேண்டும்


    iyesu onre ventum enakku
    enrum iyesu onre ventum
    enthan iyesu ninaivotu
    en ithayam enrum makizha ventum
    iyesu thasan nan enre
    manthar enrum
    pasam kolla ventum
    enthan iyesu kiristhuvaiye
    porri nan pati pukazha ventum

    niththam jepaththinile nikarilla
    nimmathi pera ventum
    enthan niththirai neraththilum iyesu
    vanthu tharisanam tharaventum
    enthan varththaikal ovvonrum
    iyesuvukku sthoththiram aakaventum
    enthan vazhkkai muzhuvathume
    iyesuvukku satsiyaka ventum

    patiththu thiyanikkave kaiyil
    enrum parisuththa vetham ventum
    nan pati makizhnthitave iyesu
    kitha patal kutave ventum
    nan sellum itamellam iyesu
    pukazh sollum varam ventum
    iyesu sevaiyai nan seythe
    ulakinil jiviththita ventum
    iyesu sevaiyai nan seythe
    enthan jivanai nan vitaventum