Tag: Kallara kallu

  • கல்லற கல்லு புரண்டிச்சு Kallara kallu purandichu

    கல்லற கல்லு புரண்டிச்சு
    கல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சு
    கட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சு
    கர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு

    மகிழ்வோம் மானிடரே
    மலர்ந்தது இன்று பரலோகம்
    மறுபடி பிறந்தவர்க்கே
    மனம் இன்னும் மாறலையோ ?
    மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ?
    மழலை போல் நாமும் மாறிடுவோம்!
    மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்!

    மரணம் அவர் முன் தோத்திச்சு
    மன்னனின் காவலும் அழிஞ்சிச்சு
    மாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சு
    மன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு

    பாவ மன்னிப்பும் கிடச்சிச்சு
    பரலோகப் பாதை தெரிஞ்சிச்சு
    புதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சு
    பிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு


    Kallara kallu purandichu
    Kalvaari raththam jeichichu
    Kattuk kathaigal olinjichu
    Kartharin magimai therinjichu

    Magizhvom maanidare
    Malarnthathu indru paralogam
    Marupadi piranthavarkea
    Manam innum maaralaiyo
    Magimayin devanukkaai Yeangalayo
    Mazhalai pol naamum maariduvom
    Maaraatha magimaikkul pravaesippom

    Maranam avar mun thoththichu
    Mannanin kaavalum azhinjichu
    Maatraan sathigalum tholanjichu
    Mannaathi mannarin maatchimai engum olirnthidichu

    Paava mannipum kidachichu
    Paraloga paathai therinjichu
    Puthu kattalai ondru piranthichu
    Pirarai nesikkumullamum malarnthichu