Tag: Kurusilae Marana

  • குருசிலே மரண பாடுகள் Kurusilae Marana paadugal

    குருசிலே மரண பாடுகள்
    நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே
    எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    எந்தன் அடிகள் எல்லாம்
    உம் மேலே விழுந்ததே
    என் சிந்தை மீறல்கள்
    முள் முடியை தந்ததே
    என்னை சிறப்பாக்கவே
    சிறுமையானீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    எந்தன் பாவ பாரத்தை
    சிலுவையில் சுமந்தீரே
    என்னை பரிசுத்தமாக்கவே
    இரத்தம் சிந்தி மரித்தீரே
    என்னை நீதிமானாக்க
    நீர் நிந்தை ஏற்றீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    எந்தன் தீய செயலினால்
    ஆணி கரத்தில் பாய்ந்ததே
    என் போக்கின் மீறலால்
    கால்கள் கடாவப்பட்டதே
    என்னை சுகமாக்கவே
    நீர் காயப்பட்டீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    என் தீய பேச்சினால்
    கசப்பு காடியை ருசித்தீரே
    என் இதய கடினத்தால்
    விலாவில் ஈட்டி பாய்ந்ததே
    எந்தன் ஆக்கினை தீர்க்க
    அலங்கோலம் ஆனீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்


    Kurusilae Marana paadugal
    Ninaikaiyile nenjam negizhuthe
    Enakaaga thanae
    Ithai yetru kondeer
    Um anbai naan
    Enna solven

    Enthan adigal ellam
    um mela vizhunthathe
    En sinthai meeralgal
    mul mudiyai thanthathe
    Ennai sirapaakave sirumai aaneere
    Um anbai naan
    Enna solven

    Enthan paava baarathai
    siluvaiyil sumantheere
    Ennai parisutham aakave
    retham sinthi maritheere
    Ennai neethimaanaaka
    neer ninthai yetrire
    Um anbai naan
    Enna solven

    Enthan theeya seyalinaal aani karathil paynthathe
    En pokin meeralaal kaalgal kadaava patathe
    Ennai sugamaakave neer kaayapateere
    Um anbai naan
    Enna solven

    En theeya pechchinaal kasappu kaadiyai rusiththeere
    En idhaya kadinaththaal vilaavil eetti paaithathe
    Enthan aakkinai theerkka alangolam aaneere
    Um anbai naan Enna solaven