Tag: Makane enrazhaiththu

  • மகனே என்றழைத்து Makane enrazhaiththu

    மகனே என்றழைத்து
    மறுவாழ்வு உனக்கு தந்த
    அன்பு மாதேவன்
    இயேசுவை நீ மறவாதே

    பாவத்தில் நீ உழன்று
    பரிதவிக்கும் நேரத்திலே
    பகல் வேஷம் மாந்தரெல்லாம்
    பார்த்து உன்னை நகைக்கையிலே
    பட்ட மரம் போல நீயும்
    கெட்டழியும் வேளையிலே

    வியாதி படுக்கையிலே
    வேதனையால் துடிக்கையிலே
    விந்தையான உலக சொந்தம்
    வெறுத்துன்னை ஒதுக்கையிலே
    மருத்துவர் கணித்து சொன்ன
    மரணம் வரும் வேளையிலே

    வறுமையில் நீ வாடி
    வருந்திடும் வேளையிலே
    வாய் பேச்சு வள்ளலெல்லாம்
    வசை மாறி பொழிகையிலே
    வாழ்ந்தது போதும் என்று
    சாக போகும் வேளையிலே


    makane enrazhaiththu
    maruvazhvu unakku thantha
    anpu mathevan
    iyesuvai ni maravathe

    pavaththil ni uzhanru
    parithavikkum neraththile
    pakal vesham mantharellam
    parththu unnai nakaikkaiyile
    patta maram pola niyum
    kettazhiyum velaiyile

    viyathi patukkaiyile
    vethanaiyal thutikkaiyile
    vinthaiyana ulaka sontham
    veruththunnai othukkaiyile
    maruththuvar kaniththu sonna
    maranam varum velaiyile

    varumaiyil ni vati
    varunthitum velaiyile
    vay pessu vallalellam
    vasai mari pozhikaiyile
    vazhnthathu pothum enru
    saka pokum velaiyile