Tag: Manam Thiranthu Ummitam

  • மனம் திறந்து உம்மிடம் Manam Thiranthu Ummitam

    மனம் திறந்து உம்மிடம் பேசினேன்
    மனக்கவலை மறைந்து போனதையா
    உள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன்
    நறுமணம் வாழ்வில் வந்ததையா

    கறுப்பு நிறம் நானென்று சொன்னேன்
    ரூபவதி நீ தான் என்றீர்
    வறண்டு போன நிலம் நான் என்றேன்
    ஜீவத்தண்ணீர் நானே என்றீர்

    பெலவீனன் நான் என்று சொன்னேன்
    என் கிருபை போதும் என்றீர்
    காயப்பட்ட மனிதன் நான் என்றேன்
    பரிகாரி நானே என்றீர்

    துணை ஏதும் இல்லை என்று சொன்னேன்
    நான் உனக்கு போதும் என்றீர்
    இந்த பூமி சொந்தமல்ல என்றேன்
    சொந்த தேசம் சேர்ப்பேன் என்றீர்


    Manam Thiranthu Ummitam Pesinen
    Manakkavalai Marainthu Ponathaiya
    Ullam Utainthu Ummai Nokkinen
    Narumanam Vazhvil Vanthathaiya

    Karuppu Niram Nanenru Sonnen
    Rupavathi Ni Than Enrir
    Varantu Pona Nilam Nan Enren
    Jivaththannir Nane Enrir

    Pelavinan Nan Enru Sonnen
    En Kirupai Pothum Enrir
    Kayappatta Manithan Nan Enren
    Parikari Nane Enrir

    Thunai Eethum Illai Enru Sonnen
    Nan Unakku Pothum Enrir
    Intha Pumi Sonthamalla Enren
    Sontha Thesam Serppen Enrir