Tag: Siluvai Meethey

  • சிலுவை மீதே தொங்கிய இயேசு Siluvai Meethey Thongiya Yesu

    சிலுவை மீதே தொங்கிய இயேசு
    என்னில் அன்பு கூர்ந்தார்
    நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
    நெருக்கி ஏவிடுதே

    சுகந்த வாசனை பலியாய் தம்மை
    உவந்து ஜீவன் தந்தார்
    என்னில் அன்பு கூர்ந்ததாலே
    என்னை அவருக்கே அர்பணித்தேன்

    கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
    பிரிக்க யாரால் கூடும்
    உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
    முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன்

    முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
    அடிமை வாழ்வடைய
    அவரின் வருகை நாளில் நானும்
    அவரைப் போல மாறிடுவேன்


    Siluvai Meethey Thongiya Yesu
    Ennil Anbu Koornthaar
    Yesuvin Anbu Enthan Ullathai
    Nerukki Yeviduthey

    Sugantha Vaasanai Baliyaai Thammai
    Uvanthu Jeevan Thanthaar
    Ennil Anbu Koornthathaaley
    Ennai Avarukke Arppanithen

    Kiristhu Yesu Anbilirunthu
    Pirikka Yaaraal Koodum
    Uyarvo Thaazhvo Thunbam Pasiyo
    Mutrum Jeyam Naan Petriduven

    Mudivu Varaiyum Anbu Koornthaar
    Adimai Vaazhvadaya
    Avarin Varugai Naalil Naanum
    Avaraippola Maariduven