Tag: Siluvai Nizhalathile

  • சிலுவை நிழலதிலே Siluvai Nizhalathile

    சிலுவை நிழலதிலே
    காண்பேன் இளைப்பாறுதல்
    வானத்திலும் பூவிலும்
    இயேசு நாமம் அடைக்கலமே – 2
    சிலுவை நிழலதிலே

    மான்கள் நீரோடைகளை
    தினம் வாஞ்சித்து கதறிடும் போல் – 2
    கர்த்தாவே என் உள்ளமும்
    உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே – 2 – சிலுவை

    உலகோர் பகைத்திட்டாலும்
    என்னை உற்றார் வெறுத்திட்டாலும் – 2
    நிந்தைகள் சுமந்திட
    எனக்கென்றும் கிருபை தாரும் – 2 – சிலுவை

    வியாதி படுக்கையிலும்
    மனம் வாடித்தவிக்கையிலும் – 2
    கர்த்தாவே உம் கிருபை
    என்னை நித்தமும் தாங்கிடுமே – 2 – சிலுவை

    எப்போ நீர் வந்திடுவீர்
    எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர் – 2
    மண்ணில் பரதேசி நான்
    வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும் – 2 – சிலுவை


    Siluvai Nizhalathile
    Kaanbeen Ilaipparuthal
    Vaanaththilum Boovilum
    Yesu Naamam Adaikkalamae – 2
    Siluvai Nizhalathile

    Maangal Neerodaigalai
    Thinam Vaanjiththu Katharidum Pol – 2
    Karthaave En Ullamum
    Ummil Sernthida Vaanjikkuthe – 2 – Siluvai

    Ulagor Pagaiththittaalum
    Ennai Utraar Veruththittaalum – 2
    Ninthaigal Sumanthida
    Enakkendrum Kirubai Thaarum – 2 – Siluvai

    Viyaathi Padukkaiyilum
    Manam Vaadi Thavikkaiyilum – 2
    Karthaave Um Kirubai
    Ennai Niththamum Thaangiduthae – 2 – Siluvai

    Eppo Neer Vanthiduveer
    Enthan Kanneer Thudaiththiduveer – 2
    Mannil Parathesi Naan
    Vegam Vanthennai Serththukkollum – 2 – Siluvai