Tag: Um Anbaal En Ullam

  • உம் அன்பால் என் Um Anbaal En Ullam

    உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
    உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
    உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
    நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்

    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் – 2

    என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
    உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
    நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
    உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்

    என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
    என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
    உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
    உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்


    Um Anbaal En Ullam Nirambi Vazhiya Seidhidum
    Um Anbai Ennaalum En Ullam Unarndhidum
    Um Anbin Kural Endrum En Kaadhil Dhonikkattum
    Neer Pesum Vaarthaigal En Manadhil Padhiyattum

    Aaradhippaen, Aaradhippaen
    Vaazhnaalellaam Ummaiyae Aaradhippaen – 2

    En Ullandhiriyangal Aaraindhu Arindhidum
    Um Vaarthai En Ullam Maara Kiriyai Seiyyattum
    Nambikkai illaamal Ullam Vaazhum Podhilum
    Um Vaakkugam Endrendrum Ennai Aattri Thaetridum

    En Kangal Endrendrum Ummai Nokki Paarthidum
    En Idhayam Endrendrum Ummaiyae Nambidum
    Um Vazhiyai Ennaalum Naan Nadandhida Seidhidum
    Um Siththam En Vaazhvil Niraivera Udhavidum