Tag: Vitak kantan

  • விடாக் கண்டன் Vitak kantan

    விடாக் கண்டன் கொடாக்
    கண்டன் வாழ்க்கை வாழாதே உன்
    பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
    அடிக்கடி கடிந்து கொண்டும்
    கடினப்படுத்தும் மனிதன்
    சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான்

    ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
    ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
    புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
    புசிக்கும் நாளில் சாவாயே
    என்றார் தேவனே – கனி
    புழுபழுத்தக் கனி அழித்த பலன்
    உலகில் வந்த – பாவம்
    புழு புழுத்த மனிதன் அழிந்து போனான்
    அதினால் வந்த சாபம்

    ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
    வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
    அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
    அலைவதினால் கிடைக்கும் பலன் மரணம் தானே
    நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
    நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
    ஒட்டுறது தான் ஒட்டும்

    ஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ ஆவியிலே நிரம்பி ஜெபித்துப் பழகணும்
    மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
    மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
    நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும் உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும்


    Vitak kantan kotak
    kantan vazhkkai vazhathe un
    pitivatha kunaththal azhinthu pokathe
    atikkati katinthu kontum
    katinappatuththum manithan
    sakayaminri satuthiyile nasamataivan

    aathiyile vanthathaiya pavam antha
    eethen thotta natuvilirunthu mokam
    pusiyathe pusiyathe enthan aathame ni
    pusikkum nalil savaye
    enrar thevane kani
    puzhupazhuththak kani azhiththa palan
    ulakil vantha pavam
    puzhu puzhuththa manithan azhinthu ponan
    athinal vantha sapam

    oru notippozhuthil azhiyum manitha vazhvu
    vinay thutippathinal palanethum kitaiyathu
    alaiyathe alaiyathe enthan makane ni
    alaivathinal kitaikkum palan maranam thane
    ni ooti ooti uzhaissalum nikkirathu than nirkum
    ni vizhunthu vizhunthu uruntalum
    otturathu than ottum

    aarathanaiyil ozhungka kalanthukollanum theva
    aaviyile nirampi jepiththup pazhakanum
    maravathe maravathe enthan makane ni
    maranthalum vazhvu illai enthan makale ithai
    niththiya saththiya suththa makaththuva
    vazhkkai vazha ventum
    uththama puththira theva namam
    uyarththappata ventum