Tag: Yar pirikka mutiyum

  • யார் பிரிக்க முடியும் Yar pirikka mutiyum

    யார் பிரிக்க முடியும் நாதா
    உந்தன் அன்பிலிருந்து தேவா

    என் சார்பில் நீர் இருக்க
    எனக்கெதிராய் யார் இருப்பார்

    மகனையே நீர் தந்தீரய்யா
    மற்ற அனைத்தும் தருவீர் ஐயா

    தெரிந்துகொண்ட உம் மகன் (மகள்) நான்
    குற்றம் சாட்ட யார் இயலும்
    நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
    தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே

    நிகழ்வனவோ வருவனவோ
    வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
    அன்பு கூர்ந்த (என்) கிறிஸ்துவினால்
    அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்

    வேதனையோ நெருக்கடியோ
    சோதனையோ பிரித்திடுமோ
    பகைமைகளோ பழிச்சொல்லோ
    பொறாமையோ பிரித்திடுமோ


    Yar pirikka mutiyum natha
    unthan anpilirunthu theva

    en sarpil nir irukka
    enakkethiray yar iruppar

    makanaiye nir thanthirayya
    marra anaiththum tharuvir aiya

    therinthukonta um makan makal nan
    kurram satta yar iyalum
    nithimanay aakkivittir
    thantanaith thirppu enakkillaiye

    nikazhvanavo varuvanavo
    vazhvo savo piriththitumo
    anpu kurntha en kiristhuvinal
    anaiththilum nan verri peruven

    vethanaiyo nerukkatiyo
    sothanaiyo piriththitumo
    pakaimaikalo pazhissollo
    poramaiyo piriththitumo