Tag: அழுகை ஆனந்தம்

  • அழுகை ஆனந்தம் ஆனதே Allugai anandamanathea

    அழுகை ஆனந்தம் ஆனதே
    புலம்பல் புதுப்பாடலானதே – என்
    கண்ணீர் களிப்பாக ஆனதே
    கர்த்தர் என்னோடு இருப்பதால்
    இயேசு என்னோடு இருப்பதால் – 2

    அல்லேலூயா அல்லேலூயா – 4

    துக்கம் சந்தோஷமானதே
    துயரம் என்னை விட்டு நீங்கினதே
    சோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிட
    இயேசு என்னோடுண்டு

    என்னை பகைக்கும் மனிதர் நடுவிலே
    என் தலையை உயர்த்தினாரே
    என்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலே
    என்னை ஆசீர்வதித்தாரே

    அல்லேலூயா அல்லேலூயா – 4

    கசப்பு மதுரமானதே
    கவலை என் வாழ்வில் ஒழிந்ததே
    சாம்பல் சிங்காரமாக மாறிட
    இயேசு என்னோடுண்டு

    தடைகள் உடைந்து போனதே
    வழிகள் மீண்டும் உண்டானதே
    புதிய காரியங்கள் என் வாழ்வில் தோன்றின
    இயேசு என்னோடுண்டு


    Allugai anandamanathea
    Pulambal puthupadalanathae – yen
    Kanneer kalipaga anathae
    Karthar yennodu irupathal
    Yesu yennodu irupathal

    Alleluya alleluya

    Thukkam santhoshamanathae
    Thuyaram yennai vittu neenginathae
    Sorvu yen vallvil thudiyai marida
    Yesu yennodundu

    Yennai pagaikum manithar naduvilae
    Yen thalaiyai uyartheenarae
    Yennai yethirkum janangal naduvilae
    Yennai asirvathitharae
    Alleluya alleluya

    Kasapu maduramanathae
    Kavalai yen vallvil olindathea
    Sambal singaramaga marida
    Yesu yennodundu

    Thadaigal udaindu ponathea
    Valigal meendum undanathae
    Pudiya kariyangal yen vallvil thondrida
    Yesu yennodundu