Tag: இருளா இருந்தேன்

  • இருளா இருந்தேன் Irulaai irundhen

    இருளா இருந்தேன்
    மறைவில் வாழ்ந்தேன்
    தேடி வந்து காதலிச்சீங்க
    எதையும் நீங்க எதிர்பார்க்காம
    கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க

    அன்பே என் பேரன்பே
    உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே
    உயிரே உயிர்த்தவரே
    முடிவில்லா உம் அன்பை தந்த அன்பே

    பாரம் தாங்காம விழுந்த என்ன
    சிலுவை பாரத்தால் தாங்குனீங்க
    குறைகள் எல்லாம் நினைக்காமலே
    கருணையாலே மன்னீச்சீங்க
    எனக்கெதிரான எழுத்தை எல்லாம்
    அழித்தது உங்க அன்பே ஐயா
    பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்

    கைகளில் ஆணி அடிச்ச போதும்
    என நினைச்சா நீங்க தொங்குனீங்க
    கேலி அவமானம் நிந்தைகளை
    எனக்காகவா நீங்க தாங்குனீங்க
    மகிமையால் என்னை முடிசூட்டவே
    சிரசில் முற்கிரீடம் ஏற்றீரையா
    நிகரே இல்லா அன்பே


    Irulaai irundhen
    Maraivila vaazhndhen
    Thedi vandhu kaadhalichinga
    Ethayum ennil Ethirpaakaama
    Kanmoodithanama Anbu vecheenga

    Anbe Peranbe
    Mudivilla um jeevanai thandha anbe
    Uyire uyirthavare
    Um uyira parigaaramaai thandha anbe

    Baaram thaangaama vizhundha enna
    Siluvai baarathaal thaanguninga
    Kuraigal ellam ninaikaamale
    Karunaiyaala mannichinga
    Enakku ethiraana ezhuthai ellam
    Azhithathu unga anbe aiya
    Piriya urave uyire

    Kaigalil aani aditha pothum
    Enna ninaicha neenga thonguninga
    Keli avamaanam ninthaigalai
    Enakaagava neenga thaanguninga
    Magimaiyal ennai mudi sootave
    Sirasil murkreedam yetreeraiyaa
    Nigare illa anbe