Tag: எனக்காக யாரும் இல்லை

  • எனக்காக யாரும் இல்லை Enakkaka yarum illai

    எனக்காக யாரும் இல்லை
    என்று ஏங்கும் உனக்காக
    இயேசு உலகில் வந்தாரே
    உலகில் வந்தாரே

    பெற்ற பிள்ளை பாசம் அற்ற
    பிள்ளை ஆச்சோ உற்ற சொந்தம்
    யாவும் உன்னை விலகி போச்சோ
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் இயேசு காப்பாரே

    கண் நிறைந்த கணவரால்
    இன்று கண்ணீர் பெருகலாச்சோ
    மனம் கவர்ந்த மனைவியால் இன்று
    மன நிம்மதி போச்சோ
    மயங்காதே கலங்காதே
    மன்னன் இயேசு காப்பாரே

    நாடி வந்த நண்பர் கூட்டம்
    ஓடி ஒழியலாச்சோ
    நம்பி வந்த மாந்தரெல்லாம்
    நழுவி மறையலாச்சோ
    நடுங்காதே கலங்காதே
    நாதன் இயேசு காப்பாரே


    enakkaka yarum illai
    enru eengkum unakkaka
    iyesu ulakil vanthare
    ulakil vanthare

    perra pillai pasam arra
    pillai aasso urra sontham
    yavum unnai vilaki posso
    kalangkathe thikaiyathe
    karththar iyesu kappare

    kan niraintha kanavaral
    inru kannir perukalasso
    manam kavarntha manaiviyal inru
    mana nimmathi posso
    mayangkathe kalangkathe
    mannan iyesu kappare

    nati vantha nanpar kuttam
    ooti ozhiyalasso
    nampi vantha mantharellam
    nazhuvi maraiyalasso
    natungkathe kalangkathe
    nathan iyesu kappare