Tag: என் இதயத்தை நேசிக்கும்

  • என் இதயத்தை நேசிக்கும் En Ithayathai Nesikkum

    என் இதயத்தை நேசிக்கும் இயேசு
    என் இதயத்தில் பிறந்து விட்டார்
    இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு
    என் உள்ளத்தில் பிறந்து விட்டார்

    நான் ஆடி பாடி போற்றிடுவேன்
    என் மீட்பர் பிறந்திட்டதால்
    விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை
    மானிடர் மேல் பிரியம் உண்டாகவே

    காணாமல் போன ஆடாம் என்னை
    தேடியே என் மீட்பர் வந்து விட்டார்
    உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன்
    உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்

    விண்ணகம் துறந்திட்ட யேசுவையே
    தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே
    விண்ணோரொடு நானும் போற்றிடுவேன்
    மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்


    En Ithayathai Nesikkum Yesu
    En Ithayathil Piranthu Vittar
    Ivvulakinil Piranthitta Yesu
    En Ullathil Piranthu Vittar

    Naan Aadi Paadi Potriduven
    En Meetpar Piranthittathaal
    Vinnile Magimai Mannile Maatchimai
    Maanidar Mel Priyam Undaagave

    Kaanaamal Pona Aadaam Ennai
    Thediye En Meetpar Vanthu Vittar
    Unmaiyai Nalthorum Potriduven
    Ullam Magizhnthu Naan Aarathippen

    Vinnagam Thuranthitta Yesuvaiye
    Thazhmaiyaai Piranthitta Paalanaiye
    Vinnorodu Naanum Potriduven
    Manninil Vazhnthu Magizhuven