Tag: சாலேமின் ராஜா இயேசு

  • சாலேமின் ராஜா இயேசு Salemin raja iyesu

    சாலேமின் ராஜா இயேசு
    சாரோனின் ரோஜா
    சஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார்
    சாப பாவம் நீக்கிடுவார்
    சாந்தம் சமாதானம் தந்திடுவார்

    இருவர் மூவர் அவர் பெயரால்
    கூடும் இடத்தில் அவர் இருப்பார்
    இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம்
    எதையும் தவறாமல் தருபவராம்
    அழைத்தால் வருவார் கேட்டால் தருவார்
    அன்பாய் என்றும் துணையிருப்பார்

    நோய்கள் பேய்கள் விரட்டிடுவார்
    நொந்த உள்ளத்தை தேற்றிடுவார்
    கண்ணீர் கவலை மாற்றிடுவார்
    கண்ணின் மணிபோல் காத்திடுவார்
    ஜெபத்தை கேட்பார்
    ஜெயத்தை கொடுப்பார்
    துதியில் வாசம் செய்திடுவார்


    Salemin raja iyesu
    saronin roja
    sanysalam varuththam thirththituvar
    sapa pavam nikkituvar
    santham samathanam thanthituvar

    iruvar muvar avar peyaral
    kutum itaththil avar iruppar
    iyesu namaththil ketpathellam
    ethaiyum thavaramal tharupavaram
    azhaiththal varuvar kettal tharuvar
    anpay enrum thunaiyiruppar

    noykal peykal virattituvar
    nontha ullaththai therrituvar
    kannir kavalai marrituvar
    kannin manipol kaththituvar
    jepaththai ketpar
    jeyaththai kotuppar
    thuthiyil vasam seythituvar