Tag: சோர்ந்து போவதில்லைநான்

  • சோர்ந்து போவதில்லை Sornthu Povathillai

    சோர்ந்து போவதில்லை
    நான் தோற்றுப்போவதில்லை-2
    என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
    எல்லாம் நான் செய்திடுவேன்
    எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து

    சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
    பற்றி எரிந்திடும் அக்கினியோ-2
    சர்வ வல்ல தேவன்
    என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து

    எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
    எனது பாதைகள் அவர் அறிவார்-2
    அவர் தரும் வெளிச்சத்தினால்
    எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து

    அசைக்க முடியாத நம்பிக்கையை
    ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2
    அகிலமே அசைந்தாலும்
    என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து


    Sornthu Povathillai
    Naan Thotru Povathillai-2
    Ennai Belappaduththum Yesuvinalae
    Ellam Naan Seithiduvaen
    Ellam Naan Seithiduvaen-2-Sornthu

    Seeri Paainthidum Singangalo
    Patri Erinthidum Akkiniyo-2
    Sarva Valla Devan
    Ennai Sethamindri kaappaar-2-Sornthu

    Enakku Kuriththathai Niraivetruvaar
    Enathu Paathaigalai avar Arivaar-2
    Avar Tharum Velichaththinaal
    Entha Irulayum Kadanthiduvaen-2-Sornthu

    Asaikka Mudiyatha Nambikkayai
    Aandavar Enakkul Vaiththuvittar-2
    Akilamae Asainthaalum
    Ennai Bayamindri Vaazha Seivaar-2-Sornthu