தம் ரத்ததததில் தோய்ந்த
I கேள்வி
- தம் ரத்ததததில் தோய்ந்த
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப
நடந்து - பாரச் சிலுவையால்
சோர்வுறவே
துனையாள் நிற்கின்றான்
பாதையே. - கூடியே செல்கின்றார்
அப்பாதையே
பின்னே தாங்குகின்றான்
சீமோனே - குருசை சுமந்தெங்கே
செல்லுகின்றார்?
முன் தபங்கிச் சுமக்கும்
அவர் யார்?
II மறுமொழி
- அவர் பின் செல்லுங்கள்
கல்வாரிக்கே
அவர் பராபரன்
மைந்தனே. - அவரின் நேசரே,
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று
பாருமே. - சிலுவைச் சரிதை
கற்றுக் கொள்வீர்
பேரன்பை அதனால்
அறிவீர். - பாதையில் செல்வோரே:
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ
சௌந்தரியம்?
III சிலுவை சரிதை
- குருசில் அறையுண்ட
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன்
எனக்காய் - கூர் முள் உம் கிரீடமாம்
குரூசாசனம்
சிந்தினீர் எனக்காய்
உம் ரத்தம் - உம் தலை சாய்க்கவோ
திண்டு இல்லை:
கட்டையாம் சிலுவை
உம் மெத்தை. - ஆணி கை கால், ஈட்டி
பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை
எவரும் - பட்டபகல் இதோ
ராவாயிற்றே:
தூரத்தில் நிற்கின்றார்
உற்றாரே. - ஆ, பெரும் ஓலமே!
தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர்
மார்பினில்: - சாகும் கள்ளன் உம்மை
நிந்திக்கவும்,
சகிக்கின்றீரே நீர்
என்னாலும். - தூரத்தில் தனியாய்
உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது
நிற்கின்றார். - “இயேசு நாசரேத்தான்
யூதர் ராஜா”
என்னும் விலாசம் உம்
பட்டமோ? - பாவி என் பொருட்டு
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை
காண்கின்றீர்?
IV சிலுவையின் அழைப்பு
(குருவானவர் பாடுவது)
- நோவில் பெற்றேன் சேயே:
அன்பில் காத்தேன்
நீ வண்ணில் சேரவே
நான் வந்தேன். - தூரமாய் அலையும்
உன்னைக் கண்டேன்:
என்னண்டைக் கிட்டிவா,
அணைப்பேன். - என் ரத்தம் சிந்தினேன்
உன் பொருட்டாய்:
உன்னைக் கொள்ள வந்தேன்
சொந்தமாய். - எனக்காய் அழாதே,
அன்பின் சேயே:
போராடு, மோட்சத்தில்
சேரவே.
V இயேசுவை நாம் வேண்டல்
- நான் துன்ப இருளில்
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே: - எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே. - நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே? - இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே
மறுமையில் வாழ
செய்யுமே.
Tham Rathathal Thoitha Angi Porthu Lyrics in English
tham raththathathathil thoyntha
I kaelvi
- tham raththathathathil thoyntha
angi porththu,
maathar pin pulampa
nadanthu - paarach siluvaiyaal
sorvuravae
thunaiyaal nirkintan
paathaiyae. - kootiyae selkintar
appaathaiyae
pinnae thaangukintan
seemonae - kurusai sumanthengae
sellukintar?
mun thapangich sumakkum
avar yaar?
II marumoli
- avar pin sellungal
kalvaarikkae
avar paraaparan
mainthanae. - avarin naesarae,
nintu, satte
thivviya mukam uttu
paarumae. - siluvaich sarithai
kattuk kolveer
paeranpai athanaal
ariveer. - paathaiyil selvorae:
mun aekidum
roopaththil kaanneero
saunthariyam?
III siluvai sarithai
- kurusil araiyunnda
manithanaay
ummai Nnokkukinten
enakkaay - koor mul um kireedamaam
kuroosaasanam
sinthineer enakkaay
um raththam - um thalai saaykkavo
thinndu illai:
kattaைyaam siluvai
um meththai. - aanni kai kaal, eetti
pakkam paaynthum,
oththaasaikkangillai
evarum - pattapakal itho
raavaayitte:
thooraththil nirkintar
uttaாrae. - aa, perum olamae!
thoy soriyil
um siram saaykkireer
maarpinil: - saakum kallan ummai
ninthikkavum,
sakikkinteerae neer
ennaalum. - thooraththil thaniyaay
um sonthaththaar
maunamaay aluthu
nirkintar. - “Yesu naasaraeththaan
yoothar raajaa”
ennum vilaasam um
pattamo? - paavi en poruttu
maalavum neer
ennil ennanmaiyai
kaannkinteer?
IV siluvaiyin alaippu
(kuruvaanavar paaduvathu)
- Nnovil petten seyae:
anpil kaaththaen
nee vannnnil seravae
naan vanthaen. - thooramaay alaiyum
unnaik kanntaen:
ennanntaik kittivaa,
annaippaen. - en raththam sinthinaen
un poruttay:
unnaik kolla vanthaen
sonthamaay. - enakkaay alaathae,
anpin seyae:
poraadu, motchaththil
seravae.
V Yesuvai naam vaenndal
- naan thunpa irulil
vinn jothiyae,
saamattum um pinnae
selvaenae: - eppaaramaayinum
um siluvai
neer thaangin sumappaen
ummotae. - neer ennaich sonthamaay
konndaal, vaerae
yaar ummilum naesar
aavaarae? - immaiyil ummanntai
naan thangiyae
marumaiyil vaala
seyyumae.