- தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான். - நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான். - தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.
Theeyor Solvathai Kelaamal Lyrics in English
- theeyor solvathaik kaelaamal
paavaththukku vilaki,
parikaasaraich seraamal
nallorodu palaki,
karththar thantha vaetham nampi
vaanjai vaiththu, athaiththaan
raap pakalum othum njaani
entum vaalum paakkiyavaan. - nathi oraththil vaadaamal
nadappattu valarnthu,
kani thanthu, uthiraamal
ilai entum pasanthu,
kaattaைth thaangum marampola
asaivintiyae nirpaan;
avan seykai yaavum vaaykka
aaseervaatham peruvaan. - theeyor, patharpol nillaamal
theerppu naalil viluvaar;
neethimaankalotiraamal
naanni nainthu alivaar;
ingae paavi makilnthaalum,
paava palan naasanthaan;
neethimaan ingaluthaalum
karththar veettil vaaluvaan.