Thiraanikku Mel திராணிக்கு மேல்

திராணிக்கு மேல் சோதித்திட இயேசு
ஒரு நாளும் விடமாட்டார்
பெலவீனத்தில் பூரண பெலனை தந்து
என்றும் வழுவாமல் காத்திடுவார்

நம்பிடு இயேசுவை
நல்லவர் உனக்கு

கடும் புயலினிலே திசை மாறிடாதே
தாங்கும் புயங்களினால் உன்னை தாங்கிடுவார்
குழப்பங்களால் வாழ்வை மாய்த்திடாதே
யேஹோவா ஷாலோம் உண்டு சமாதானம் தருவார்

காரிருளில் தடுமாறிடாதே
நித்திய சூரியனாய் உன் முன்னே செல்வார்
தோல்விகளால் மனம் தளர்ந்திடாதே
யேஹோவா நிசி உண்டு வெற்றி கொடி ஏற்றுவார்

சோதனையில் சோர்ந்திடாதே
உன்னை அழைத்தவரோ என்றும் நடத்திடுவார்
தேவைகளால் தேவனை மறந்திடாதே
யேஹோவா யீரே உண்டு எல்லாம் பார்த்துக் கொள்வார்


Thiraanikku Mel Lyrics in English
thiraannikku mael sothiththida Yesu
oru naalum vidamaattar
pelaveenaththil poorana pelanai thanthu
entum valuvaamal kaaththiduvaar

nampidu Yesuvai
nallavar unakku

kadum puyalinilae thisai maaridaathae
thaangum puyangalinaal unnai thaangiduvaar
kulappangalaal vaalvai maayththidaathae
yaehovaa shaalom unndu samaathaanam tharuvaar

kaarirulil thadumaaridaathae
niththiya sooriyanaay un munnae selvaar
tholvikalaal manam thalarnthidaathae
yaehovaa nisi unndu vetti koti aettuvaar

sothanaiyil sornthidaathae
unnai alaiththavaro entum nadaththiduvaar
thaevaikalaal thaevanai maranthidaathae
yaehovaa yeerae unndu ellaam paarththuk kolvaar


Posted

in

by

Tags: