துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
சரணங்கள்
- அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி - மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி - திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி - ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி - சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி - விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி
Thuthi Thangiya Paramandala Suvisedaga Naamam Lyrics in English
thuthi thangiya paramanndala suvisedaka naamam,
supa mangala miku sampirama suka sopana shaemam!
saranangal
- athi sunthara nirai konnduyar arul mokkisha theepan,
kathi umparkal tholum ingitha karunnaip pirathaapan — thuthi - manthai aayar panninthu paatham makilnthu vaalththiya aththanaar,
ninthaiyaay oru kanthai moodavum vantha maapari suththanaar — thuthi - thiruvaan ula karasaay valar thaeva soroopanaar,
oru maathutai vinai maarida narar roopamathaanaar — thuthi - aapiraam muni yidamaeviya pathilaal upakaaran,
epiraeyarkal kulam thaaveethen arasar korkumaaran — thuthi - saathaa rana vaethaa kama saasthra suviseshan,
kothae puri aathaa mutai kothra thiru vaeshan — thuthi - vinnnnaadarum mannnnaadarum maevun thirup paathan,
pannnnothuvar kannnnaam valar para manndala naathan — thuthi