துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தூயாதி தூயரே – உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
நீர் ஒருவரே பாத்திரர்
உம்மை பாடி போற்றுவோம்
உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம்
உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்
என் வாழ்வில் நீர் செய்த
நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட
என் நாட்கள் போதாதே
நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்
என்மீது நீர் கொண்ட அன்பினை
உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில்
உம் நேசத்தை உணர்ந்தேன்
உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்
சோர்ந்து போன வேளைகளில்
புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
உம் ஜீவனை தந்தீர்
உம் பாதம் விழுந்து பணிகின்றேன்
என் வாழ்வை உமக்கு தருகின்றேன்
Thuthigalil vasam seiyum Lyrics in English
thuthikalil vaasam seyyum
engal thooyaathi thooyarae – ummai
thuthikkirom ummai tholukirom
neer oruvarae paaththirar
ummai paati pottuvom
unthan naamam uyarththuvom
umakkae thuthikal seluththukirom
um paatham thaalnthu pannikintom
en vaalvil neer seytha
nanmaikal aeraalam aeraalam
athai ennnni naan ummai thuthiththida
en naatkal pothaathae
neer seytha nanmai ninaikkinten
ullam nirainthu thuthikkinten
enmeethu neer konnda anpinai
um siluvaiyil arinthaen
enakkaay neerpatta atikalil
um naesaththai unarnthaen
um siluvaiyai Nnokki paarkkinten
um anpai ninaiththu thuthikkinten
sornthu pona vaelaikalil
puthiya pelan thantheer
varanndu pona enthan vaalkkaiyil
um jeevanai thantheer
um paatham vilunthu pannikinten
en vaalvai umakku tharukinten