உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு
என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கெட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார்
- இல்லையென்ற நிலை வந்ததோ
இருப்பதுபோல் அழைக்கும் தேவன்
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே - சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே - நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே - மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளி வரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே - பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே - செங்கடல் உனக்கு முன்னானதோ
சேனைகளெல்லாம் பின்னானதோ
சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
சேதமின்றி காப்பார் கலங்காதே
Unakkule Irukindra Unn Yesu Lyrics in English
unakkullae irukkinta un Yesu
entum periyavarae
nee ariyaathathum unakkettathathumaana
periya kaariyangal seythiduvaar
- illaiyenta nilai vanthatho
iruppathupol alaikkum thaevan
periyavar unakkullae irukkintar
paarththukkolvaar nee kalangaathae - soolnilai ellaam ethiraanatho
suttaththaar unnil pakaiyaanaaro
vallavar unakkullae irukkintar
valakkaram thaanguvaar kalangaathae - nampikkai illaa nilaiyaanatho
visuvaasam unnil kuraivaanatho
arputhar unakkullae irukkintar
athisayam seyvaar nee kalangaathae - mathuramaana vaalvu kasappaanatho
oli varum naeram irulaanatho
jeevanulla thaevan irukkintar
yaavaiyum seyvaar kalangaathae - peruvellam mothi atikkintatho
perungaattil padaku thavikkintatho
periyavar unakkullae irukkintar
paarththukkolvaar nee kalangaathae - sengadal unakku munnaanatho
senaikalellaam pinnaanatho
senaiyin karththar irukkintar
sethaminti kaappaar kalangaathae