- உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே! - மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர்தாம்,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார். - தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே,
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார். - மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார். - வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ?
Urugayo Nenjame Lyrics in English
- urukaayo nenjamae
kurusinil antho paar!
karang kaalkal aanni yaerith
thiru maeni naiyuthae! - mannuyirkkaayth thannuyirai
maaykka vantha mannavarthaam,
innilamel laam purakka
eena kuru serinaar. - thaaka minji naavaranndu
thanga maeni manguthae,
aekaparan kannnayarnthu
eththanaiyaay aenguraar. - moovulakaith thaangum thaevan
moontanni thaangidavo?
saavu vaelai vanthapothu
siluvaiyil thonginaar. - valla paeyai vella vaanam
vittu vantha theyvam paaraay,
pullar itho nanti kettup
puram paakki naar anto?