வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே
- ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை - அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமா?
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை - பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — வாசலண்டை - மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் — வாசலண்டை - வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? — வாசலண்டை
Vaasalandai Nindru Aasaiyai Thattum Lyrics in English
vaasalanntai nintu aasaiyaay thattum
naesar Yesuvukkunnullam thiravaayo
paaviyai orupothum thallaatha naesar
vaaventu unnai alaikkiraarae
- aatharippaar aarumillai yentennnni
aatharai meethinil alainthiduvaayae
kaannaatha aattaைth thaeti vantha maeyppar
kanndunnai manthaiyil serththiduvaar — vaasalanntai - arpa vaalvai niththiya vaalvu entennnni
tharparan thayavai thallidalaamaa?
ninaiyaatha naeram maranam santhiththaal
niththiyaththai engu nee kalippaay? — vaasalanntai - paavaththinaal saapa rokaththaal thoynthu
maayaiyil aalnthu matinthiduvaanaen
paavaththaip pokkidum thooya uthiraththin
jeeva oottil moolki meetpuraayo? — vaasalanntai - manam maari marupati piranthidaayaakil
makiparin iraajjiyam kaanak koodumo
piranthaalo jalaththaalum aaviyaalum meyyaay
piravaesippaay thaeva iraajjiyaththil — vaasalanntai - valiyum saththiyamum jeevanum Yesu
vaasalum maeyppanum naathanum Yesu
Yesuvallaal vaetru iratchippu illaiyae
iratchannya naal inte vanthidaayo? — vaasalanntai