பல்லவி
வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே
தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை
சரணங்கள்
- பூ உலகில் போற்றும் உம்மை
புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை
தீ உலகில் நின்று தீவிரமாய்
சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய் – வாரீரோ
- கண்டதில்லை நேர் முகமாய்
கல்வாரியின் காந்தனை நாம்
கண்டிடவே முகமுகமாய்
கர்த்தா உன் சாயல் முழுமையுமாய் – வாரீரோ
- காயம் கொண்ட கால் கரமும்
கருணை பொங்கும் விலாபுரமும்
நேயன் உன் அங்க மகத்துவமாம்
நீர் வரும் போதுள்ளம் பொங்கிடுமாம் – வாரீரோ
- இருப்பதுவும் நாம் இவ்வுலகில்
இயேசுவே உம் மா தயவில்
விருப்பம் முழுவதும் உம் வரவில்
வேந்தனே வாருமே நீர் விரைவில் – வாரீரோ
- இயேசுவே எம் இன்ப முகம்
ஏழையாம் காண மகிழும் முகம்
வீசும் மின்னொளியென விசும்பினில் நீர்
வேகமே வந்தெம்மை சேர்த்துக் கொள்வீர் – வாரீரோ
Vareero Vaan Pathiyae Lyrics in English
pallavi
vaareero vaanpathiyae sereero thirumathiyae
theereero em kuraivai thaareero um niraivai
saranangal
- poo ulakil pottum ummai
pukalnthu maelokil vaalththa emmai
thee ulakil nintu theeviramaay
serththuk kolveerae ummidamaay – vaareero
- kanndathillai naer mukamaay
kalvaariyin kaanthanai naam
kanntidavae mukamukamaay
karththaa un saayal mulumaiyumaay – vaareero
- kaayam konnda kaal karamum
karunnai pongum vilaapuramum
naeyan un anga makaththuvamaam
neer varum pothullam pongidumaam – vaareero
- iruppathuvum naam ivvulakil
Yesuvae um maa thayavil
viruppam muluvathum um varavil
vaenthanae vaarumae neer viraivil – vaareero
- Yesuvae em inpa mukam
aelaiyaam kaana makilum mukam
veesum minnoliyena visumpinil neer
vaekamae vanthemmai serththuk kolveer – vaareero