Vinai Soola Tintha Iravinil வினை சூழா திந்த இரவினில் காத்தாள்

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
விமலா, கிறிஸ்து நாதா.

அனுபல்லவி

கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி! — வினை

சரணங்கள்

  1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
    செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
    பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
    பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். — வினை
  2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
    ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே;
    சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
    சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. — வினை
  3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
    ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
    பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
    பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். — வினை
  4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
    இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
    உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
    உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். — வினை

Vinai Soola Tintha Iravinil Lyrics in English

vinai soolaa thintha iravinil kaaththaal,
vimalaa, kiristhu naathaa.

anupallavi

kanakaapi shaekanae, avaniyark kolir, pira
kaasanae, pava naasanae, svaami! — vinai

saranangal

  1. senta pakal muluthum ennaik kann paarththaay;
    sey karumangalil karunnaikal pooththaay;
    ponta thaathma sareeram pilaikka oonn paarththaay;
    pollaap paeyin mosam nintenaik kaaththaay. — vinai
  2. sooriyan asthamith thotich sentanae;
    jothi natchaththiram elunthana vaanae;
    serum vilangu patchi uraipathi thaanae
    sentana; atiyaenum palli kolvaenae. — vinai
  3. jeevan thanthenai meettaோy siriyaen un sontham;
    jekath thinpangal vilainthu serthal nirppantham;
    paaviyaen tholuthaen nin paathaara vintham;
    patcham vaiththaalvaiyael, athuvae aanantham. — vinai
  4. intaip poluthil naan sey paavangal theeraay;
    idarkal thunpangal neenga ennaik kai seraay;
    untan atimaik kentum uvantharul kooraay;
    uyirai eduppaiyael, un muththi thaaraay. — vinai

Posted

in

by

Tags: