- விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;
பளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்! - நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே,
மா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே! - உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே;
நீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே! - அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும்,
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும். - உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ?
உம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ? - என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்;
என் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர்! - மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன்;
உம் திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்.
Vinnnnorkal Pottum Aanndavaa Lyrics in English
- vinnnnorkal pottum aanndavaa, um maenmai arputham;
palingupolath thontumae um kirupaasanam! - niththiyaanantha thayaaparaa, alpaa omaekaavae,
maa thooyar pottum aanndavaa raajaathi raajaavae! - um njaanam thooymai vallamai alaviranthathae;
neer thooyar, thooyar; unthanai thuthiththal inpamae! - anpin soroopi thaevareer, naan paaviyaayinum,
en neesa nenjaik kaetkireer um sonthamaakavum. - ummaippol thayai mikuntha or thanthaiyum unntoo?
ummaippol anpu niraintha thaaythaanum eenndunntoo? - en paavamellaam manniththeer suththaangam nalkineer;
en kuttamellaam thaangineer anpin piravaakam neer! - maeloka niththiya paakkiyaththai naan pettu vaaluvaen;
um thivviya inpa mukaththai kannnuttup poorippaen.