Vizhiththiruppoem! Vaekam விழித்திருப்போம்! வேகம்

விழிப்புடன் செயலாற்றுவோம்!

விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்!
கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்!
இடைவிடாது ஜெபித்திடுவோம்!
இந்தியரை நாம் சுதந்தரிப்போம்!

  1. விரைந்து நெருங்கிடும் அவர் வருகை
    விளைந்து நிற்கும் வயல் வெளிகள்
    தாமதிக்க இனி காலமில்லை
    சிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்!
  2. அத்தி மரமும் துளிர்த்ததே
    ஆண்டவர் வருகையும் நெருங்கியதே
    விதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமே
    களஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்!
  3. இந்தியர் அனைவரும் நமது ஜனம்
    ஆண்டவர் இயேசுவின் பின்னே வர
    சுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம்
    மங்கள நித்திய வாழ்வளிப்போம்!
  4. தூய்மை வாழ்வை அணிந்திருப்போம்
    தூயவர் வருகைக்குக் காத்திருப்போம்
    வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம்
    மங்கா விளக்காய் எரிந்திடுவோம்!

Vizhiththiruppoem! Vaekam Lyrics in English
vilippudan seyalaattuvom!

viliththiruppom! vaekam ulaiththiduvom!
kalinthidum naatkalai unarnthiduvom!
itaividaathu jepiththiduvom!
inthiyarai naam suthantharippom!

  1. virainthu nerungidum avar varukai
    vilainthu nirkum vayal velikal
    thaamathikka ini kaalamillai
    siluvai veerarae aarththeluveer!
  2. aththi maramum thulirththathae
    aanndavar varukaiyum nerungiyathae
    vithaiththavar munnor aruppavar naamae
    kalanjiyam serppom virainthiduvom!
  3. inthiyar anaivarum namathu janam
    aanndavar Yesuvin pinnae vara
    suviseshath theepam aettivaippom
    mangala niththiya vaalvalippom!
  4. thooymai vaalvai anninthiruppom
    thooyavar varukaikkuk kaaththiruppom
    vanjakap paeyinai jeyiththiduvom
    mangaa vilakkaay erinthiduvom!

Posted

in

by

Tags: