ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்
- கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய் - பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய் - கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்
aen alukintay yaarai nee thaedukintay
aekkam pokka Yesu irukka aen nee alukintay
- kannnneer ponginatho kavanippaar illaiyo
kaarunnya karththar Yesu irukka aen nee alukintay - pettaோr kaivittaro pillaikal paenalaiyo
yaarinum maelaay kaappavar irukka aen nee alukintay - kaniyatta maram aanaayo vettida sollittaro
kalai koththi uramida unnathar irukka aen nee alukintay