ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்
- கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு - மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு - இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு - சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு - பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு - செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க – ஏறு
Yerukindrar Thalladi Thavalnthu Lyrics in English
aerukintar thallaatith thavalnthu kalaippotae
en Yesu kurusai sumanthae
en naesar kolkothaa malaiyinmael
nadanthae aerukintar
- kannaththil avan ongi atikkach
sinnap pillaipol aengi nintar
anthap pilaaththum kaiyaik kaluvi
aanndavarai anuppukintan – aeru - minjum pelaththaal eetti eduththae
nenjaip pilanthaan aa! kodumai
iraththamum neerum oti varuthae
iratchakarai Nnokkiyae paar – aeru - inthappaadukal unthan vaalvukkaaych
sonthappaduththi aettukkonndaar
naesikkintayo Yesu naatharai
naesiththu vaa kuruseduththae – aeru - seval koovidum moontu vaelaiyum
sontha kuruvai maruthaliththaan
oti oliyum paethuruvaiyum
thaeti anpaay Nnokkukintar – aeru - pinnae nadantha anpin seeshanpol
pinpatti vaa siluvai varai
kaatiyaip pol kasanthirukkum
kashdangalai avaridam sol – aeru - settaைkalin geel serththanaiththidum
sonthath thaayin anpithuvae
erusalamae! erusalamae!
entaluthaar kann kalanga – aeru