இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு இரட்சகரே
அல்லேலுயா ஆராதனை
ராஜ ராஜனுக்கே
- வறண்ட நிலமாய் இருந்த வாழ்வை
வயலாய் மாற்றினாரே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
களிப்பாய் மாற்றினாரே
குறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
கவலை தீர்த்தாரே
கண்ணீர் துடைத்தாரே – (2) அவர் - சேற்றினின்றும் குழியினின்றும்
தூக்கி எடுத்தாரே
கன்மலைமேல் கால்கள் நிறுத்தி
உறுதிப்படுத்தினாரே
புதிய பாடல் நாவில் தந்து
பாட வைத்தாரே
துதிக்க செய்தாரே – என்னை (2) - பாவம் யாவும் மன்னித்தாரே
சாபம் நீக்கினாரே
கிருபையாலே நீதிமானாய்
என்னை மாற்றினாரே
பிள்ளையாக என்னை கூட
ஏற்றுக் கொண்டாரே
அப்பா இயேசுவே – என் (2) - பரலோகத்தில் எனது பெயரை
எழுதி வைத்தாரே
நானும் வாழ அங்கோர் இடத்தை
தெரிந்து வைத்தாரே
இயேசு வருவார் அழைத்துச் செல்வார்
பறந்து சென்றிடுவேன்
சுகமாய் வாழ்ந்திடுவேன் – (2) அங்கு
Yesu nallavar Yesu vallavar
Yesu iratchakarae
allaeluyaa aaraathanai
raaja raajanukkae
- varannda nilamaay iruntha vaalvai
vayalaay maattinaarae
alukai niraintha pallaththaakkai
kalippaay maattinaarae
kuraikal ellaam niraivaay maatti
kavalai theerththaarae
kannnneer thutaiththaarae – (2) avar - settinintum kuliyinintum
thookki eduththaarae
kanmalaimael kaalkal niruththi
uruthippaduththinaarae
puthiya paadal naavil thanthu
paada vaiththaarae
thuthikka seythaarae – ennai (2) - paavam yaavum manniththaarae
saapam neekkinaarae
kirupaiyaalae neethimaanaay
ennai maattinaarae
pillaiyaaka ennai kooda
aettuk keாnndaarae
appaa Yesuvae – en (2) - paralaeாkaththil enathu peyarai
eluthi vaiththaarae
naanum vaala angaeாr idaththai
therinthu vaiththaarae
Yesu varuvaar alaiththuch selvaar
paranthu sentiduvaen
sukamaay vaalnthiduvaen – (2) angu