Yesuvin Anbai Maranthiduvayo இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்

இயேசுவின் அன்பை

மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2

மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ –இயேசுவின்

அளவில்லா அன்பு அதிசய அன்பு

ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு

களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2

கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு –இயேசுவின்

அலைகடலை விட பரந்த பேரன்பு

அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு

மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2

சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு –இயேசுவின்

எனக்காக மனுவுரு தரித்த நல் அன்பு

எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு

எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -2

எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு – இயேசுவின்

கரைக்கடங்கா அன்பு கசிதரும் அன்பு

கைதி போல் இயேசுவே சிறையிடும் அன்பு

விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு -2

விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு –இயேசுவின்


Yesuvin Anbai Maranthiduvayo Lyrics in English
Yesuvin anpai maranthiduvaayo

maranthiduvaayo manithap pannpirunthaal

Yesuvin anpai

maranthidaathirukka nee siluvaiyilae avar -2

mariththuth thongidum kaatchi manathil nillaatho –Yesuvin

alavillaa anpu athisaya anpu

aalamakalam neelam ellai kaannaa anpu

kalangamillaa anpu karunnai ser anpu -2

kalvaari malai kannnneer sollidum anpu –Yesuvin

alaikadalai vida parantha paeranpu

annaimaar anpellaam thiraiyidum anpu

malaipol elunthannai valaiththidum anpu -2

silaiyena piramaiyil niruththidum anpu –Yesuvin

enakkaaka manuvuru thariththa nal anpu

enakkaaka thannaiyae unavaakkum anpu

enakkaaka paadukal aetta paeranpu -2

enakkaaka uyiraiyae thantha thaeva anpu – Yesuvin

karaikkadangaa anpu kasitharum anpu

kaithi pol Yesuvae siraiyidum anpu

vilaiyillaap paliyaaka vilangidum anpu -2

vivarikka vivarikka virinthidum anpu –Yesuvin


Posted

in

by

Tags: