ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டு Allkadalilee mingal palaunde

ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டு
அதையும் பிடித்திட மீனவர் பலருண்டு
அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு
அதற்க்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு

யாரை அனுப்புவேன் – யார்
என் வேலையாய் போவார் ஓ… ஓ….

அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்
அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட்ட
அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு

சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்
சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்
ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு
ஜீவனைக் கொடுத்தவர் இயேசுவே
தாணுண்டு – ஆண்டவர் இயேசுவை
அறிவிக்க யாருண்டு
ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு


Allkadalilee mingal palaunde
athayum pidithidd minawar palaundee
alliyum athumakaal ulagil pallaunde
atharkai parithawike ingee yare undee

yarai annupuven – yar
yen velaiyai povar O.. O…

allaiyai polave allaindhe thirindhidum
ammaidhiyai illandhu adurupthi adayhitte
annagam perundu allaithidee yareundeee
annagam perundu mitide yareundee
annagam perundu mitide ni undee

siluvai annbinai satrum ariyamal
sindhiye rathathai magathuwam unaramal
jivikum makkalai nesikeyarunde
jivanai kodethawar yesuve
thanundu-anndwar yesuwai
arivike yarunde
andawar thedum manidhan ni undee