எனைப் பாரும் Ennai paarum

எனைப் பாரும் எனைப் பாரும்
உம் முகத்தை மறைக்காத்திரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

என் இயேசுவே என் வாழ்க்கையில்
நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்
அதையெல்லாம் வீணடித்தேன்
இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2)

மெய் அன்பை கண்ட பின்பும்
பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்
எல்லாம் மாயை என்று கண்டேன்
உம் அன்பே போதும் என்றேன் (2)

வழி இதுவே என்று தெரிந்தும்
நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்
ஏமாற்றங்கள் அடைந்தேனே
இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2)


Ennai paarum ennai paarum
um mugathai maraikathirum
kenjukiren kenjukiren

En yesuve en vazhkayil
neer ethanai tharunangal thantheer
athai ellam veenadithu
ipo ondrum illaamal nirkiren – 2

Mei anbai kanda pinbum
poi anbukaga yengi nendren
ellam mayai endru kanden
um anbu pothum endren – 2

Vazhi ithuvae endru therindthum
Naan angum ingum sutri thirnden
yematrangal adaithene
ini ummai vittu sellamatten