என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2
வேறொன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே
என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2
ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது-2
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2
என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை
Ennai munnarindhu munkurithavarae
Ennai irudhivarai thaangi kolbavarae
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae
Ennai azhaithavarae
Ennai nadathuveerae
Irudhivarai ummil maatramillai – 2
Aayiram padhinaayiram janangal vaazhum boomiyil
Adhisayamae ennai neer azhaithadhu – 2
Thagudhi Illai endru odhungi nindra ennai
Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2