ஏற்ற காலத்தில் உன்னை Yetre kalathil unnai

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2
சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2-ஏற்ற காலத்தில்

உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2
உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2-ஏற்ற காலத்தில்

காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2
உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2-ஏற்ற காலத்தில்

உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2

ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் -2
சோர்ந்து போகமாட்டேன்
நான் அவசரப்படமாட்டேன்-2
அழைத்தவரின் கரத்தில் நான் அடங்கி இருப்பேன்-ஏற்ற காலத்தில்


yetre kalathil unnai uyarthiduvar
yetre velaiyil unnai payan paduthiduwar-2
sordhe pogamal nii awasarampadamal-2
allathawarin karathil nii adangi irundhal-2-yetree kalathil

ullagam thotramm munne unnai munkurithare
thayin karpathil unn karuvai kandare-2
ullaimkaiyile unnai warainthullar
unnai uyarthuwar kartharuku kathiru-2-yetree kalathil

kalathirkuu munne ni avasarepadade
karthar kurithe nerathuku porumaiyai kathiruu
unnaikondadu than saiyee ninaithee
thittangal ellam niraivetruwar-2-yetree kalathil

unnai vilungide sathan sutri thirigiran
thelindhabudhiyode nii vilithekonderee-2
viswasathil uridiyai irundhu
sathanai jayithe nii waldhedu-2

yetre kalathil yennai uyarthiduvar
yetre velaiyil payanpaduthiduwar-2
sordhe pogamaten-2
allathawarin karathil nan adangi irupen-2-yetree kalathil