நாம் கிரகிக்ககூடாத Naam Gragikka kudadha

நாம் கிரகிக்ககூடாத
காரியங்கள் செய்திடுவார்
நாம் நினைத்து பார்க்காத
அளவில் நம்மை உயர்த்திடுவார்

பெரியவர் எனக்குள் இருப்பதனால்
பெரிய காரியங்கள் செய்திடுவார்

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார்
எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார்

எவரையும் மேன்மைப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே
எவரையும் பெலப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே
மனிதனால் கூடாதது
தேவனால் இது கூடுமே

கர்த்தர் என் வலப்பக்கம்
இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லை
தேர்த்தியான இடங்களிலே
எனக்கு பங்கு கிடைத்திடுமே


Naam Gragikka kudadha
Kaariyangal seidhiduvar
Naam ninaithu paarkadha
alavil nammai uyarthiduvar

Periyavar enakkul iruppadhinal
Periya kaariyangal seidhiduvar

Aaraindhu mudiyadha
adhisayangal seidhiduvar
Enni mudiyadha
arpudhangal seidhiduvar

Evaraiyum menmaipadutha
Um karathinal aagumae
Evaraiyum belapadutha
Um karathinal aagumae
Manidhanal kudadhadhu
Devanal idhu kudumae

Karthar en valappakkam iruppadhinal
Oruvarum asaippadhillai
Nerthiyana idangalilae
enakku pangu kidaithidumae