வெட்கத்தின் நாட்கள் Vetkathin Naatkal

வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்
துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே – 2

வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்
பட்டைபூச்சி பட்சித்து போட்டதே
இழந்த யாவையும் திரும்ப தருவேன்
என்று தேவன் வாக்களித்தாரே – 2

அக்கினியாலும் கொள்ளையினாலும்
சத்துரு என்னை சூறையாடினான்
சகலத்தையுமே திருப்பி கொள்ள
கர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் – 2

அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லை
இரத்தத்தாலே மீட்கப் பட்டேனே
கிருபையாலே பிள்ளையானேன்
இயேசுவுடனே ஆளுகை செய்வேனே – 2


Vetkathin Naatkal Pothum Pothum En
Thukathin Naatkal Mudinthu Ponathey – 2

Vettukilligal Pachai Pulukal
PattaipoochiumPatchithu Pottathey
Elantha Yaavaiyum Thirumba Tharuven
Yendru Devan Vaakallitharey – 2

Akkiniyaalum Kollaiyinalum
Sathuru Ennai Sooraiyaadinaan
Sagalathaiumay Thirupi Kolla
Karthar Enaku Uthavi Seikiraar – 2

Adimai Ini Illai Irulin Pidiyillai
Rathathalay Meetkapataeyney
Kirubaiyaalay Pillaiyanean
Yesuvudanay Aalugai Seiveynay – 2