மனிதனிடம் தேவன் Manithanitam thevan

மனிதனிடம் தேவன் காட்டி அன்பு – இந்த
மண்ணிலே மனிதனாக உதித்தது
அன்பு அன்பு அன்பு தேவ அன்பு
அன்பு அன்பு

அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது
அன்புக்கு பொறாமையில்லை அன்பு
தன்னை புகழாது இறுமாப்பாய் இராது
அயோக்கியத்தை செய்யாது
தற்போழிபை நாடாது கோபமும் கொள்ளாது
அன்பு தீங்கு நினையாது அன்பு

அன்பு சகலமும் தாங்கும்
சகலத்தையும் சகிக்கும்
சகலத்தையும் விசுவாசிக்கும்
சகலத்தையும் நம்பும்
அன்புக்கும் ஆழமில்லை
அன்புக்கு உயரமில்லை
அன்புக்கு ஈடு இல்லை
இணையேதும் இல்லை
அன்புக்கிணையேதும் இல்லை – அன்பு

தரிசனமானாலும் ஒழிந்துபோகும்
அன்பு ஒழியாது
அந்நியபாஷையானாலும் ஓய்ந்துபோகும்
அன்பு ஓயாது! விசுவாசம் நம்பிக்கை
அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்
இவைகளில் எல்லாம் அன்பே பெரியது
அந்த அன்பை நாடுங்கள் அன்பு


Manithanitam thevan katti anpu intha
mannile manithanaka uthiththathu
anpu anpu anpu theva anpu
anpu anpu

anpu nitiya santhamum thayavum ullathu
anpukku poramaiyillai anpu
thannai pukazhathu irumappay irathu
ayokkiyaththai seyyathu
tharpozhipai natathu kopamum kollathu
anpu thingku ninaiyathu anpu

anpu sakalamum thangkum
sakalaththaiyum sakikkum
sakalaththaiyum visuvasikkum
sakalaththaiyum nampum
anpukkum aazhamillai
anpukku uyaramillai
anpukku iitu illai
inaiyethum illai
anpukkinaiyethum illai anpu

tharisanamanalum ozhinthupokum
anpu ozhiyathu
anniyapashaiyanalum ooynthupokum
anpu ooyathu visuvasam nampikkai
anpu immunrum nilaiththirukkum
ivaikalil ellam anpe periyathu
antha anpai natungkal anpu